காவலாளி கழுத்தை இறுக்கி கொலை

சேலம் சேலத்தில் உள்ள பருப்பு மில்லில் காவலாளி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இறந்து கிடந்த காவலாளி சேலம் அமானி கொண்டலாம்பட்டி சித்தன் நகரை சேர்ந்தவர் தங்கையன் (வயது 58). இவர் கடந்த 3 ஆண்டுகளாக லீ பஜார் பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவருடைய பருப்பு மில்லில் இரவு காவலாளியாக வேலைப் பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தங்கையன் பருப்பு மில்லுக்கு வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணி அளவில் ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது அங்கு தங்கையன் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் தனியார் ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையில் தங்கையனின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்ததை உறவினர்கள் பார்த்தனர்.

போலீசார் விசாரணை இதனால் அவரது சாவில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தங்கையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார், தங்கையன் இறந்து கிடந்த பருப்பு மில்லுக்கு சென்று உரிமையாளர் மாரிமுத்து மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பருப்பு மில்லில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கழுத்தை இறுக்கி கொலை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, பருப்பு மில்லுக்கு கடந்த 7-ந் தேதி வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் வேலை கேட்டு வந்துள்ளனர். இதில் ஒருவருக்கு மட்டும் உரிமையாளர் வேலை வழங்கி உள்ளார். இதனால் அன்றைய தினம் இரவு மட்டும் அவர் மூட்டை இறக்கும் வேலைக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலைக்கு வரவில்லை. இதற்கிடையில் தான் நேற்று காலை காவலாளி தங்கையன் இறந்து கிடந்தார்.

மேலும் பருப்பு மில்லில் இருந்து ரூ.22 ஆயிரம் திருட்டு போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிதாக வேலைக்கு சேர்ந்த நபர் தனது கூட்டாளியுடன் வந்து காவலாளி தங்கையனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அதன் அடிப்படையில் அவர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்று கூறினர். பருப்பு மில்லில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/State/the-guard-was-strangled-to-death-896246
https://www.dailythanthi.com/News/State/the-guard-was-strangled-to-death-896246
https://www.dailythanthi.com/News/State/the-guard-was-strangled-to-death-896246
https://www.dailythanthi.com/News/State/the-guard-was-strangled-to-death-896246
https://www.dailythanthi.com/News/State/the-guard-was-strangled-to-death-896246
https://www.dailythanthi.com/News/State/the-guard-was-strangled-to-death-896246